செய்திகள்
வாய்மேடு அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வாய்மேடு அருகே தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாய்மேடு:
வாய்மேடு அருகே தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமை தாங்கினார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரேவதி பாலகுரு, முருகானந்தம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் வீரப்பன், நாகராஜ், செங்குட்டுவன் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.