செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Published On 2021-02-05 22:24 GMT   |   Update On 2021-02-05 22:24 GMT
திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு சமயத்தில் ரத்து செய்யப்படும். அதேபோல் கல்விக் கடனும் ரத்து செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சி:

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டம் நேற்று உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலை சந்திப்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர்களான கருணாநிதியோ, ஜெயலலிதாவோ நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. ஆனால் தற்போதுள்ள அரசு நீட் தேர்வை ஆதரித்தது. நீட் தேர்வுக்கு பயந்து தமிழகத்தில் இதுவரை 14 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு தி.மு.க. ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு சமயத்தில் ரத்து செய்யப்படும். அதேபோல் கல்விக் கடனும் ரத்து செய்யப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனவுடன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சரியான விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News