செய்திகள்
நாகையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நாகை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கோகுலகநாதன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் அமுதகுமார் கலந்து கொண்டு பேசினார்.
முகக்கவசம் அணியாதவர்களிடம் பொது சுகாதார சட்டத்தின் கீழ் இலக்கு நிர்ணயித்து கட்டாய அபராத வசூல் செய்வதை கைவிட வேண்டும். 2013-14-ம் ஆண்டுகளில் அரசின் நேரடி பயிற்சி பெற்ற 2-ம் நிலை சுகாதார ஆய்வாளர்கள் பிரிவினருக்கு, 1 - ம் நிலை சுகாதார ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். வெளி ஆதார அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 2,715, 2-ம் நிலை சுகாதார
ஆய்வாளர் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் நிரந்தர மஸ்தூர் கள பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.