செய்திகள்
கோப்பு படம்.

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா

Published On 2021-02-01 20:26 IST   |   Update On 2021-02-01 20:26:00 IST
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு 14 ஆயிரத்து 361 ஆக உயர்ந்தது.

அதே நேரத்தில் நேற்று 23 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 25 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். 

மாவட்டத்தில் கொரோனாவுக்கு 150 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 186 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Similar News