வில்லியனூர் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
பதிவு: ஜனவரி 25, 2021 09:19
தற்கொலை
வில்லியனூர்:
வில்லியனூரை அடுத்த ஒதியம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 70). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால்
அவதிப்பட்டு வந்தார். பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இந்த நிலையில் மனவேதனை அடைந்த எல்லப்பன், நேற்று காலை வீட்டில்
யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.