செய்திகள்
ராகுல் காந்தி

தமிழை மத்திய அரசும், மோடியும் அவமதிப்பதை ஏற்க முடியாது- ராகுல் காந்தி பிரசாரம்

Published On 2021-01-24 06:16 GMT   |   Update On 2021-01-24 06:16 GMT
ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஈரோடு:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நேற்று கோவை, திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து அவர் இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

• நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன். தமிழை மத்திய அரசும், மோடியும் அவமதிப்பதை ஏற்க முடியாது.

• தமிழக மக்களுடன் எனக்கு இருப்பது அரசியல் பிணைப்பல்ல, குடும்ப பிணைப்பு.

• டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழக கலாசாரத்தை மதிக்கவில்லை.

• இந்தியாவில் மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

• ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உயர்வு தமிழக மக்களை வெகுவாக பாதிப்படைய செய்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மொழிபெயர்த்து கூறினார்.
Tags:    

Similar News