செய்திகள்
மல்லிகைப்பூ விலை

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை உயர்வு

Published On 2021-01-23 01:01 GMT   |   Update On 2021-01-23 01:01 GMT
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை உயர்ந்து கிலோ ரூ.2 ஆயிரத்து 240-க்கு ஏலம் போனது.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம், சிக்கரசம்பாளையம், கொத்தமங்கலம், ராஜன் நகர், பீர்கடவு, அரியப்பம்பாளையம், செண்பகபுதூர், பெரியகுளம், டி.ஜி.புதூர், ஏழூர் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் 4 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இதில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்து 240-க்கும், முல்லைப்பூ ரூ.1,360-க்கும், காக்கடா ரூ.675-க்கும், செண்டுமல்லி ரூ.81-க்கும், பட்டுப்பூ ரூ.130-க்கும், ஜாதிமல்லி ரூ.800-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.160-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.

இதேபோல் நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1,750-க்கும், முல்லைப்பூ ரூ.1,360-க்கும், காக்கடா ரூ.600-க்கும், செண்டுமல்லி ரூ.67-க்கும், பட்டுப்பூ ரூ.135-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.820-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.180-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை ஆனது.

நேற்று முன்தினத்தை விட நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ரூ.490-ம், காக்கடா ரூ.75-ம், செண்டுமல்லி ரூ.14-ம், ஜாதிமல்லி ரூ.200-ம் உயர்ந்திருந்தது. பட்டுப்பூ ரூ.5-ம், கனகாம்பரம் ரூ.120-ம் அரளி ரூ.20-ம் விலை குறைந்திருந்தது.
Tags:    

Similar News