செய்திகள்
சேத்தூர், தேவதானம் பகுதியில் சேதமடைந்த நெற்பயிரை அதிகாரிகள் பார்வையிட்ட போது எடுத்த படம்.

சேத்தூர், தேவதானம் பகுதியில் சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டனர்

Published On 2021-01-22 14:14 GMT   |   Update On 2021-01-22 14:14 GMT
சேத்தூர் தேவதானம் பகுதியில் சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தளவாய்புரம்:

சேத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்தனர். இதுபற்றி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனை அடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி நேற்று சேத்தூர், தேவதானம் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த பணியில் சென்னை வேளாண்மை இயக்குனர் கழக பிரதிநிதி தனசேகரன், மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் வனஜா, பிரதிநிதி பூவலிங்கம், ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா, துணை அலுவலர் விநாயகமூர்த்தி, சேத்தூர் வருவாய் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.

Tags:    

Similar News