செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார்? - முதலமைச்சர் பழனிசாமி கேள்வி

Published On 2021-01-20 16:09 IST   |   Update On 2021-01-20 16:09:00 IST
அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார்? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
காஞ்சிபுரம்:

சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சி தலைவர்கள் தற்போதே தங்களின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இதில் முக்கியமாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சொந்த தொகுதியில் குலதெய்வ வழிபாடு செய்தபின்னர் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில் ,

நான் நேரடியாக தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். நான் எம்எல்ஏ-வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று தெரிவித்துள்ளார். முதல்வரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.மக்களின் குறைகளை கேட்கும் ஸ்டாலின் ஏன் ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யவில்லை. அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார்? என்று கேள்வி எழுப்பினார்.

Similar News