செய்திகள்
உடையார்பாளையம் அருகே பெண்ணை தாக்கியதாக தம்பதி உள்பட 5 பேர் மீது வழக்கு
உடையார்பாளையம் அருகே பெண்ணை தாக்கியதாக தம்பதி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருடைய மனைவி பாத்திமா(வயது 40). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் மகிமைராஜ் என்பவருக்கும் இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது மகிமைராஜ், அவருடைய மனைவி ரோஷியா உள்பட 5 பேர் சேர்ந்து பாத்திமாவை தாக்கியுள்ளனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் பாத்திமா புகார் அளித்தார். அதன்பேரில் 5 ேபர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.