செய்திகள்
கோப்புப்படம்

அரியலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை

Published On 2020-12-31 16:02 IST   |   Update On 2020-12-31 16:02:00 IST
கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் அரியலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:

கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் அரியலூர் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) இரவு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதியில்லை. 

மேலும் இரவில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக அதிவேகத்தில் இருசக்கர வாகனங்களை இயக்கிக்கொண்டு வீதிகளில் அதிக இரைச்சல், சத்தத்துடன் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக செல்லுதல், பொது இடங்களில் அதிகமான நபர்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டமாக கூடுதல், கேளிக்கையாக வாண வேடிக்கை மற்றும் பட்டாசுகளை பொது இடங்களில் வெடித்தல் மற்றும் அதிக சத்தத்துடன் கூடிய பாடல் மற்றும் இசையினை ஒலிக்கச்செய்தல் போன்ற புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் அனுமதியில்லை. 

இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News