செய்திகள்
ஊட்டி தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 24 பேர் கைது
ஊட்டி தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 24 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:
ஊட்டி ஆம்ஸ் அவுஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு ஊட்டி நகர மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய 24 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.46 ஆயிரத்து 300 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.