செய்திகள்
கொரோனா கால கடன் வழங்க சிறு வியாபாரிகள் கணக்கெடுப்பு

வேலூர் மாநகராட்சியில் கொரோனா கால கடன் வழங்க சிறு வியாபாரிகள் கணக்கெடுப்பு

Published On 2020-12-19 09:30 GMT   |   Update On 2020-12-19 09:30 GMT
வேலூர் மாநகர பகுதியில் கொரோனா கால கடன் வழங்க நடைபாதை மற்றும் சிறு வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர்:

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நடமாடும் தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின்படி, நடமாடும் தெரு வியாபாரிகள் மாத தவணையாக ஓராண்டில் திருப்பி அளிக்கக்கூடிய வகையில் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை வர்த்தக மானிய கடனைப் பெற முடியும்.

இதற்காக வேலூர் மாநகர பகுதியில் உள்ள நடைபாதை மற்றும் சிறு வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் சுமார் 4,500 சிறு வியாபாரிகள் உள்ளனர். அவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டி தெரு பகுதியில் கடை வைத்துள்ள சிறு வியாபாரிகள் குறித்து கணக்கெடுப்பு 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. இதில் சிறு வியாபாரிகள் பெயர், ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை சேகரித்தனர்.
Tags:    

Similar News