செய்திகள்
ஊத்தங்கரை அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
ஊத்தங்கரை அருகே புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை போலீசார் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற அந்த பகுதியை சேர்ந்த சந்திரன் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கடையில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.