செய்திகள்
தயாநிதி மாறன்

அர்ஜூன மூர்த்தி எனது தந்தையிடம் ஆலோசகராக இருந்ததில்லை: தயாநிதி மாறன்

Published On 2020-12-05 07:15 IST   |   Update On 2020-12-05 07:15:00 IST
அர்ஜூனமூர்த்தி, எனது தந்தை மறைந்த முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் பொய்யான தகவல் என்று தயாநிதிமாறன் கூறியுள்ளார்.
சென்னை :

முன்னாள் மத்திய மந்திரியும், மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சில பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் தொடங்க இருக்கிற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜூனமூர்த்தி, எனது தந்தை மறைந்த முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் பொய்யான தகவல். அது போன்று எவரும் எனது தந்தையிடம் ஆலோசகராக இருந்ததில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News