செய்திகள்
கோப்புபடம்

விக்கிரமங்கலம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் - பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு

Published On 2020-11-30 15:36 IST   |   Update On 2020-11-30 15:36:00 IST
விக்கிரமங்கலம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கோவில் சீமை நடுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் ஜோதி(60). இவர்கள் 2 பேரும் விவசாயிகள். 2 பேரின் குடும்பத்தினருக்கு இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன், ஜோதியிடம் இடப்பிரச்சினை குறித்து கேட்டுள்ளார்.

அப்போது அங்கு வந்த மணிகண்டனின் உறவினர் ராஜலட்சுமி, சுந்தராம்பாள், கனகராஜ் ஆகிய 3 பேரும், அதேபோல் ஜோதியின் உறவினர் மணிவாசகன், மணிகண்டன், செல்வராஜ் ஆகிய 3 பேரும் அங்கு வந்தனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் வாக்குவாதம் முற்றி மோதலானது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் இரு தரப்பினரும் தனித்தனியே புகார் கொடுத்தனர். அதன்பேரில் மணிகண்டன் மற்றும் அவருடைய உறவினர்கள் ராஜலட்சுமி, சுந்தராம்பாள், கனகராஜ் ஆகியோர் மீதும், ஜோதி மற்றும் அவருடைய உறவினர்கள் மணிவாசகன், மணிகண்டன், செல்வராஜ் ஆகியோர் மீதும் என பெண்கள் உள்பட 8 பேர் மீது விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News