செய்திகள்
விபத்து பலி

சாத்தூர் அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2020-11-30 12:26 IST   |   Update On 2020-11-30 12:26:00 IST
சாத்தூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையை சேர்ந்தவர் சேவுகபெருமாள் (வயது 34). இவரும், உறவினர் சோமு என்பவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு சிவகாசி-சாத்தூர் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை சோமு ஓட்டி வந்தார். அப்போது மயிலாடுதுறையில் உள்ள ஒரு பட்டாசு கடையின் முன்பு சென்று கொண்டிருந்த போது அங்கு கனரக வாகனத்தில் அடிப்பட்டு இறந்து கிடந்த பசு மாட்டின் மீது சோமு மோதியுள்ளார். இதில் வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த சேவுகபெருமாள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததார். பலத்த காயம் அடைந்த சோமுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News