செய்திகள்
கோப்புபடம்

லாரியை ஓட்டிச்சென்று 3 லாரிகள் மீது மோதிய சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது

Published On 2020-11-10 20:08 IST   |   Update On 2020-11-10 20:08:00 IST
நாகப்பட்டினம் அருகே நெல் மூட்டைகளுடன் நிறுத்தப்பட்டிருந்த லாரியை ஓட்டிச்சென்று 3 லாரிகள் மீது மோதிய சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்:

நாகை முதலாவது கடற்கரை சாலையில் தனியாருக்கு சொந்தமான எடை போடும் எந்திர மையம் உள்ளது. இங்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து லாரிகளில் ஏற்றி வரப்படும் நெல் மூட்டைகள் எடை சரி பார்க்கப்பட்டு, அதன் பின்னர் திறந்தவெளி சேமிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இங்கு எடை போடுவதற்கு காலதாமதம் ஆவதால், லாரிகளை சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர்கள் அருகில் காத்திருப்பார்கள்.

இந்தநிலையில் நேற்று ஏராளமான லாரிகள் நெல் மூட்டைகளுடன் எடை போடுவதற்காக அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தன. அப்போது திடீரென வாலிபர் ஒருவர், ஒரு லாரியில் ஏறி, அதை ஓட்டி செல்ல முயன்றார். அப்பேது அருகில் இருந்த 3 லாரிகள் மீது மோதினார். இதில் மூன்று லாரிகளும் சேதம் அடைந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற லாரி டிரைவர்கள், அந்த வாலிபரை பிடித்து நாகை டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து அந்த வாலிபரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நாகை மாவட்டம் வலிவலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் சேகரன் என்பவரின் மகன் தமிழ்வேந்தன் (வயது 25) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்வேந்தனை கைது செய்து அவர் நெல் மூட்டைகளுடன் லாரியை கடத்த முயன்றாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News