செய்திகள்
கொலை

களம்பூர் அருகே தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை

Published On 2020-11-08 13:24 IST   |   Update On 2020-11-08 13:24:00 IST
களம்பூர் அருகே தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை செய்யப்பட்டார். யார் அவர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த களம்பூர் அருகே வடமாதிமங்கலம் பெரிய ஏரியில் நேற்று அதிகாலை 55 வயது மதிக்கத்தக்க பெண் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து களம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, விநாயகமூர்த்தி, முத்துக்குமார், மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்?, ஏன் இங்கு வந்தார்? என்ற விவரங்கள் தெரியவில்லை. அவர் ஆரஞ்ச் மற்றும் சந்தன நிற சேலையும், வெள்ளை நிற ரவிக்கையும், நீல நிற பாவாடையும் அணிந்திருந்தார். கவரிங் வளையல் போட்டுள்ளார்.

மேலும் அந்த பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை கொலை செய்தவர்கள் யார்? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News