செய்திகள்
தற்கொலை

மதுராந்தகம் அருகே அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-11-05 13:40 IST   |   Update On 2020-11-05 13:40:00 IST
மதுராந்தகம் அருகே குடும்ப தகராறில் அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூரை சேர்ந்தவர் ரவி (வயது 48). இவர் மணப்பாக்கத்தில் உள்ள கோவிலில் அர்ச்சகராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை குடும்பத்தகராறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மகன் லோகநாதன் படாளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தற்கொலை செய்து கொண்ட ரவிக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

Similar News