செய்திகள்
கூடுவாஞ்சேரி அருகே சகோதரர் தரக்குறைவாக பேசியதால் பெண் தற்கொலை
கூடுவாஞ்சேரி அருகே சகோதரர் தரக்குறைவாக பேசியதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த பாண்டூர் மூப்பனார் சாலை பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மனைவி கற்பகம் (வயது 43). இவருக்கும், இவரது சகோதரர் மணிக்குமார் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மணிக்குமார் தங்கை கற்பகத்தை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த கற்பகம் அரளி விதை அரைத்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கற்பகத்தை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கற்பகம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கற்பகத்தின் கணவர் குபேந்திரன் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி போலீசில் மணிக்குமார் மீது புகார் செய்தார்.
இதன் அடிப்படையில் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.