செய்திகள்
மாணவர் கூட்டமைப்பினர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.

காவலர் தேர்வை நடத்தக்கோரி கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கருப்புக்கொடி ஊர்வலம்

Published On 2020-11-02 14:04 GMT   |   Update On 2020-11-02 14:04 GMT
காவலர் தேர்வை நடத்தக்கோரி கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக மாணவர்கள் கூட்டமைப்பினர் கருப்புக்கொடி ஊர்வலம் நடத்தினார்கள்.
புதுச்சேரி:

புதுவையில் வருகிற 4-ந்தேதி நடைபெற இருந்த காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வினை நிறுத்தி வைத்து கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், தேர்வை உடனடியாக நடத்த வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பினர், காவலர் தேர்வை நடத்தக்கோரி கருப்புக்கொடி ஏந்தி கவர்னர் மாளிகையை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர். இதற்காக அவர்கள் புதுவை காமராஜர் சிலையருகே நேற்று கூடினார்கள். அங்கிருந்து கருப்புக்கொடியுடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலத்துக்கு மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். ஊர்வலம் நேரு வீதி, மிஷன் வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அதற்கு மேல் செல்ல அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டைகளை தள்ளிக்கொண்டு செல்ல மாணவர் கூட்டமைப்பினர் முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர். அதன்பின் மாணவர் கூட்டமைப்பினர் கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News