செய்திகள்
குஷ்பு

தலைவர் வேடத்தில் கே.எஸ்.அழகிரி நடிக்கிறார்- குஷ்பு

Published On 2020-10-13 13:26 IST   |   Update On 2020-10-13 13:26:00 IST
நடிகை என கூறிய கே.எஸ்.அழகிரி தலைவர் வேடத்தில் நடிக்கிறார் என்று குஷ்பு கூறி உள்ளார்.
சென்னை:

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்தார்.

பாஜகவில் சேர்ந்து டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய குஷ்புவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து சென்னை கமலாலயத்திற்கு சென்ற குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* மக்களுக்கு நல்லது செய்யவே பாஜகவில் சேர்ந்துள்ளேன். பதவிக்காகவோ, பேரம் பேசியோ சேரவில்லை.

* காங்கிரசில் இருந்தபோது மனசாட்சியின்றிதான் பாஜகவை விமர்சித்தேன்.

* வேளாண் சட்டத்தை கொண்டு வந்ததே காங்கிரஸ்தான்.

* இருக்கிற இடத்தில் விஸ்வாசம் காட்டித்தான் வந்துள்ளேன்.

* ரூ.2 வாங்கி என்னை பற்றிய வதந்தி ட்வீட் போட்டது காங்கிரஸ் கட்சியினர்தான்.

* எனது அரசியல் முடிவுகளுக்கு சுந்தர்.சி. காரணம் என்று கூறக்கூடாது.

* பெண் ஒருவர் புத்திசாலியாக இருக்கக்கூடாது என நினைத்தனர்.

* நடிகை என கூறியவர் தலைவர் வேடத்தில் நடிக்கிறார்.

* பாஜகவில் சேருவதற்கு கணவர் சுந்தர்.சி. காரணமில்லை என காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு குஷ்பு விளக்கம் அளித்தார்.

Similar News