செய்திகள்
மற்ற கட்சிகள் உளவு பார்க்கின்றன: பா.ஜனதா தலைவர் எல். முருகன்
பா.ஜனதாவில் தங்களது கட்சியினரை இணைத்து விடுவார்களோ என மற்ற கட்சிகள் உளவு பார்க்கின்றன என தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் எல். முருகன் கூறியதாவது:-
பா.ஜனதாவில் தங்களது கட்சியினரை இணைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மற்ற கட்சிகள் உளவு பார்க்கின்றன. தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை பா.ஜனதா ஏற்படுத்தி வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையை அலங்கரிப்பது நிச்சயம்’’ என்றார்.