செய்திகள்
விநாயகர் சிலைகளை ஆர்வமாக பார்த்து வாங்கிச்சென்ற பெண்கள்

ஈரோட்டில் விநாயகர் சிலைகள் விற்பனை

Published On 2020-08-19 15:38 IST   |   Update On 2020-08-19 15:38:00 IST
ஈரோட்டில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. பெண்கள் ஆர்வமாக பார்த்து தங்களுக்கு தேவையான சிலைகளை வாங்கிச்சென்றனர்.
ஈரோடு:

நாடு முழுவதும் வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி வீடுகளில் வழிபாடு செய்வதற்கு வசதியாக சிலைகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஈரோட்டில் பிரப்ரோடு பகுதியில் நேற்று ஏராளமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. ரூ.150 முதல் ரூ.2 ஆயிரம் வரை விலையில் விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் வைக்கப்பட்டு இருந்தன. இதனை பெண்கள் ஆர்வமாக பார்த்து தங்களுக்கு தேவையான விநாயகர் சிலைகளை வாங்கிச்சென்றனர்.

Similar News