செய்திகள்
மண்சரிவு

குடியிருப்பு பகுதியில் மண்சரிவு- பொதுமக்கள் பீதி

Published On 2020-08-12 11:59 GMT   |   Update On 2020-08-12 11:59 GMT
குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
குன்னூர்:

குன்னூர் நகராட்சியின் 30-வது வார்டிற்கு உட்பட்டது காட்டேரி பால்காரர் லைன் குடியிருப்பு. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் வீடுகளுக்கு முன்புறம் இருந்த இடத்தை பொதுமக்கள் நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் காட்டேரி பால்காரர் லைனில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பிரதான நடை பாதை மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இதனால் வீடுகள் மற்றும் மின் கம்பங்கள் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளன. இனிவரும் நாட்களில் தொடர் மழை பெய்யும் போது வீடுகள் இடிந்து விடும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட துறையினர் அந்தரத்தில் தொங்கும் வீடுகளை பாதுகாக்க நடைபாதையுடன் கூடிய தடுப்பு சுவர் அமைத்துத்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News