செய்திகள்
தனியாக சுற்றித்திரியும் குட்டியானை

தனியாக சுற்றித்திரியும் குட்டியானையை தொந்தரவு செய்யக்கூடாது- வனத்துறை அறிவுரை

Published On 2020-08-11 10:10 GMT   |   Update On 2020-08-11 10:10 GMT
தனியாக சுற்றித்திரியும் குட்டியானையை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
குன்னூர்:

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. இங்கு பலாப்பழ சீசன் நிலவுவதால், சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் வந்து செல்கின்றன. தற்போது 12 காட்டுயானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டு உள்ளது. அதிலிருந்து குட்டியானை ஒன்று பிரிந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் தனியாக சுற்றித்திரிகிறது. சில நேரங்களில் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துகிறது. குட்டியானையை வனப்பகுதிக்குள் விரட்டினாலும், மீண்டும் சாலைக்கு வந்து விடுகிறது. தற்போது கே.என்.ஆர். நகர், மரப்பாலம் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிகிறது. சில நாட்களில் கூட்டத்துடன் சேர்ந்துவிடும் என்பதால், அந்த குட்டியானையை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர்அறிவுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News