செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-08-10 09:39 GMT   |   Update On 2020-08-10 09:39 GMT
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 948 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஓரநள்ளி கிராமத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களுடன் மூன்றாம் நிலை தொடர்பில் இருந்த தேனாடு கிராமத்தை சேர்ந்த 2 ஆண்கள், 2 சிறுவர்கள், 3 பெண்கள், ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த ஊட்டி செவிலியர் குடியிருப்பை சேர்ந்த ஒரு பெண், காந்தல் கீழ் போகி தெருவை சேர்ந்த ஒரு ஆண், கோவை சென்று திரும்பியவருடன் தொடர்பில் இருந்த ஊட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஒரு பெண், ஜெகதளா அருகே காரைக்கொரையை சேர்ந்த ஒரு பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

நீலகிரியில் கொரோனா பாதிப்பு 958 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 803 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3 பேர் இறந்து விட்டனர். 152 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News