செய்திகள்
பெரியாறு நீர்மின் நிலையம்

முல்லைப்பெரியாறு நீர்மின் நிலையத்தில் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி

Published On 2020-08-08 13:23 IST   |   Update On 2020-08-08 13:23:00 IST
முல்லைப்பெரியாறு நீர்மின் நிலையத்தில் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கூடலூர்:

கூடலூர் அருகே லோயர்கேம்பில் முல்லைப்பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அங்கு மின் உற்பத்திக்காக 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஜெனரேட்டர்கள் மூலமும் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

கடந்த 4-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையொட்டி 2 ஜெனரேட்டர்கள் மூலம் 54 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது. இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 132 அடியை எட்டியது. இதனால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் உள்ள 4 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு, 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

Similar News