செய்திகள்
தற்கொலை

எருமாடு அருகே நகைக்கடை ஊழியர் தற்கொலை

Published On 2020-07-10 19:42 IST   |   Update On 2020-07-10 19:42:00 IST
எருமாடு அருகே நகைக்கடை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர்:

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எருமாடு அருகே உள்ள கூலால் பகுதியை சேர்ந்தவர் அமிர்தலால்(வயது 25). டெல்லியில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது அமிர்தலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சேரம்பாடி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து எருமாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News