செய்திகள்
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கிருமி நாசினி வழங்கும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டு உள்ள காட்சி.

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கிருமி நாசினி வழங்கும் தானியங்கி எந்திரம்

Published On 2020-07-07 11:32 GMT   |   Update On 2020-07-07 11:32 GMT
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கிருமி நாசினி வழங்கும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டது.
ஊட்டி:

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் பணிக்கு வரும் அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஆரம்பத்தில் கைகளால் தொடாமல் காலால் மிதித்தால் கிருமி நாசினி வழங்கும் எந்திரம் மூலம் கைகளை சுத்தப்படுத்தி வந்தனர். இதற்கிடையே நேற்று கிருமி நாசினி வழங்கும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டது. எந்திரத்தின் கீழ்ப்பகுதியில் கையை கொண்டு சென்றதும் கிருமி நாசினி தெளிக்கிறது. குறிப்பிட்ட அளவு மட்டும் வருவதால் கிருமி நாசினி வீணாவதில்லை. மின்சாரம் மூலம் தானியங்கி எந்திரம் செயல்படுகிறது. கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களும் கைகளை சுத்தப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே முகக்கவசம் அணியாமல் அலுவலகத்துக்குள் வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News