செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்- கவர்னர் விளக்கம்

Published On 2020-06-30 06:22 GMT   |   Update On 2020-06-30 06:22 GMT
பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கவர்னர் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நாம் வெளியில் செல்லும்போது யாரேனும் ஒருவர் முககவசத்தை சரியாக அணியாமலும், சமூக இடைவெளியை பற்றி புரிந்து கொள்ளாமலும் இருக்கிறார்கள். அவர்கள் கடைக்காரராகவும் இருக்கலாம், வாடிக்கையாளராகவும் இருக்கலாம், அவர் கிராமப்புற தொழிலாளியாகவும் இருக்கலாம், காய்கறி சந்தைகளில் தேவையானதை வாங்குவதற்கு வந்தவராகவும் இருக்கலாம், அவருடைய செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவேற்றாமலும் இருக்கலாம். இதுபோன்று பாதுகாப்பற்று இருப்பது அச்சுறுத்தலாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

நமக்கு அண்டை மாநிலமான தமிழகம் இன்னும் பொது முடக்கத்தில் இருந்து விடுபடவில்லை. நாம் ஏன் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு தாமதித்துக் கொண்டிருக்கிறோம். நாம் அன்றாடம் பழகுபவர்களிடம் இருந்தே நமக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால் நமக்கு தெரியாது.

முககவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கிருமி நாசினிகளை பயன்படுத்துதல், ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவேற்றம் செய்து பயன்படுத்துதல் என்ற 4 பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் கடைப்பிடிப்பது உங்களுடைய சொந்த பாதுகாப்பை உறுதி செய்யும். இந்த 4 பாதுகாப்பு வழி முறைகளையும் பின்பற்றுவதை உங்களுடைய குறிக்கோளாக கொள்ள வேண்டும். அனைவரும் 100 சதவீத பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News