செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு- கவர்னர் எச்சரிக்கை

Published On 2020-06-28 06:44 GMT   |   Update On 2020-06-28 06:44 GMT
அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என கவர்னர் கிரண்பேடி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வெளியே செல்லும் போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். காய்கறி, மீன் மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடைக்காரர்களுக்கும் பங்கு உண்டு.

எனவே வாடிக்கையாளர்களிடம் முககவசம் அணியும் படியும், சமூக இடைவெளியை பின்பற்றும்படியும் சொல்ல வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் நோய்த்தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு அருகில் யாரேனும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதை ஆரோக்கிய சேது செயலி மூலம் தெரிந்துகொள்ள முடியும். எனவே இந்த செயலியை அனைவரும் தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மற்றவர்களை பாதுகாக்க நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News