செய்திகள்
கைது

9 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2020-06-25 12:47 IST   |   Update On 2020-06-25 12:47:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடிகள் 9 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடிகள் வசா என்ற வசந்த் (வயது 26), ஜெயராமன் (25), நெல்சன் மண்டேலா என்ற கார்த்திக் (23), மதிவாணன் என்ற விக்கி (24), தட்சணாமூர்த்தி (27), இளவரசு (24), வினோத் என்ற வினோத்குமார் (32), ஸ்ரீதர் (23), பாபு (28) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் ரவுடிகள் 9 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Similar News