செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-06-24 11:24 IST   |   Update On 2020-06-24 11:24:00 IST
புதுச்சேரியில் இன்று மேலும் 59 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 461ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இன்று காலை வரை கொரோனா பாதிப்பு 4.5 லட்சத்தை தாண்டிய நிலையில் 56.7 சதவீத நோயாளிகள் குணமடைந்தனர்

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,39,010 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 64,603 பேருக்கும், டெல்லியில் 66,602 பேருக்கும், குஜராத்தில் 28,371 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 12,261 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 461ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு 176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Similar News