செய்திகள்
கள்ளக்காதல் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற ராணுவ வீரர்
வேலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள கம்மவான்பேட்டையை சேர்ந்தவர் செல்வம் (வயது42). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். தற்போது தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மனைவி சித்ரா (36) தம்பதிக்கு கடந்த 20 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகள், மகன் உள்ளனர்.
சித்ராவுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அது கள்ளக்காதலாக மாறியது இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர்.
இதுபற்றி தெரிந்த செல்வம் மனைவியை கண்டித்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று சித்ராவிடம் அவருடைய மகள் கள்ளக்காதலை கைவிடும்படி கூறினார்.
அப்போது ஆத்திரமடைந்த சித்ரா அவரது மகளை தாறுமாறாக அடித்தார். இதுபற்றி அவருடைய மகள் செல்போன் மூலம் செல்வத்திற்கு தகவல் கூறினார்.
இரவு பணியில் இருந்து வந்த செல்வம் இதுபற்றி கேட்டதால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்வம் வீட்டில் இருந்த கட்டையால் சித்ராவின் தலையில் அடித்தார். பலத்த காயமடைந்த அவர் சரிந்து விழுந்து இறந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.