செய்திகள்
கோப்பு படம்

ஊட்டியில் பயங்கரம் - கஞ்சா போதையில் பெற்றோரை வெட்டிய மகன்

Published On 2020-05-26 15:29 IST   |   Update On 2020-05-26 15:29:00 IST
ஊட்டியில் கஞ்சா போதையில் பெற்றோரை அரிவாளில் சரமாரியாக வெட்டிய மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு ராஜாராம் (வயது 21) என்ற மகன் உள்ளார்.

கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான ராஜாராம் அடிக்கடி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று கஞ்சா போதை தலைக்கு ஏறியதும் பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த ராஜாராம் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பெற்றோரை சரமாரியாக வெட்டினார். பலத்த காயத்துடன் பெற்றோர் அலறி சத்தம் போட்டனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டுவெலிங்டன் கண்டோன்மென்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வெலிங்டன் போலீசார் ராஜாராமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News