செய்திகள்
உயிரிழப்பு

மூலக்குளத்தில் வட்டிக்கடைக்காரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Published On 2020-05-25 20:06 IST   |   Update On 2020-05-25 20:06:00 IST
மூலக்குளத்தில் வட்டிக்கடைக்காரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:

புதுவை ரெயின்போநகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மகேந்திரகுமார் ஜெயின் (வயது55). இவர் வில்லியனூர் மெயின் ரோடு மூலக்குளத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வட்டிக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று காலை வழக்கம் போல் மகேந்திரகுமார் ஜெயின் வட்டிக்கடையை திறந்து வைத்து நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இதுபற்றி அவர் தனது மனைவிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனடியாக அவரது மகன் சுலப் ஜெயின்(33) வட்டிக்கடைக்கு விரைந்து வந்தார். அப்போது தனது தந்தை மகேந்திரகுமார் ஜெயின் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத் தினர் உதவியுடன் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மகேந்திரகுமார் ஜெயின் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகேந்திரகுமார் ஜெயின் திடீர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Similar News