செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

புதுவையில் மேலும் 2 பேருக்கு கொரோனா

Published On 2020-05-25 19:34 IST   |   Update On 2020-05-25 19:34:00 IST
புதுவையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 பேர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியிலும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் ஜிப்மரிலும், கேரளா கன்னூர் மற்றும் சென்னையில் தலா ஒருவரும், மாகியில் 2 பேரும் என மொத்தம் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை புதுவை மாநிலத்தில் கொரோனா வால் 43 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 12 பேர் குணமடைந்துள்ளனர். மீதி 32 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது புதுவையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மூகாம்பிகை நகரை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவரும், மற்றொருவர் 26 வயதுடைய நெட்டப்பாக்கம் தனியார் கம்பெனி ஊழியரும் ஆவார்கள்.

இவர்கள் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த தகவலை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

Similar News