செய்திகள்
பண்ணாரி சோதனைச்சாவடி அருகில் சாலையை கடந்து சென்ற புள்ளிமான்கள்
பண்ணாரி சோதனைச்சாவடி அருகில் சாலையை புள்ளிமான்கள் கடந்து சென்றன.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதில் மான் இனங்களில் புள்ளிமான், கடமான், வெளிர்மான் ஆகியவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. தற்போது பண்ணாரி வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் யானை, மான் போன்ற வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வர தொடங்கியுள்ளன. இதில் மான்கள் கூட்டம் கூட்டமாக சாலையோரம் உள்ள புற்களை மேய்ந்தபடி சுற்றித்திரிகின்றன. மேலும் அவ்வப்போது சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றன.
அதேபோல் நேற்று காலை தண்ணீர் தேடி பண்ணாரி வனப்பகுதியில் இருந்து ஏராளமான புள்ளிமான்கள் வெளியேறின. பின்னர் இந்த மான்கள் கூட்டமாக கூட்டமாக பண்ணாரி சோதனைச்சாவடி அருகில் தேசிய நெடுஞ் சாலையை கடந்து சென்றன. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.
சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டு துள்ளி ஓடிய புள்ளிமான்கள் கூட்டத்தை வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்தனர். ஒரு சிலர் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மான்கள் ரோட்டை கடந்து சென்றதும் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் பகல் நேரத்தில் சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.