செய்திகள்
தற்கொலை

ஈரோட்டில் நர்சிங் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

Published On 2020-05-15 15:17 IST   |   Update On 2020-05-15 15:17:00 IST
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நர்சிங் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ள எண்ணமங்கலம் வாகைமரத்து கொடிக்கால் பகுதியை சேர்ந்தவர் கிட்டான். கூலித் தொழிலாளி. இவரது மகள் கார்த்திகா (20). இவர் கவுந்தப்பாடி அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் கார்த்திகா தனது வீட்டிற்கு வந்து இருந்தார். இந்த நிலையில் அவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News