செய்திகள்
கூடுவாஞ்சேரியில் மனைவியை அடித்துகொன்று பார் உரிமையாளர் தற்கொலை
கூடுவாஞ்சேரியில் மனைவியை அடித்துகொன்று பார் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரியை அடுத்த வல்லாஞ்சேரியை சேர்ந்தவர் ஸ்ரீவல்சன்(52). பார் உரிமையாளர். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவரது 3-வது மனைவி உமா(38). நேற்று இரவு ஸ்ரீவல்சன் 3- வது மனைவி வீட்டில் இருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் மனைவி உமாவை சுத்தியலால் அடித்து கொன்று விட்டு ஸ்ரீவல்சன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.