செய்திகள்
பீர் பாட்டில்கள்

புதுவை கோரிமேடு எல்லையில் 11 பீர் லாரிகள் தடுத்து நிறுத்தம்

Published On 2020-04-25 16:33 IST   |   Update On 2020-04-25 16:33:00 IST
புதுவை மாநில எல்லையான கோரிமேட்டில் ஊரடங்கு காரணமாக கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பீர் லோடு ஏற்றி வந்த 11 லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை மாநில எல்லையான கோரிமேட்டில் ஊரடங்கு காரணமாக கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து ரூ.ஒரு கோடி மதிப்புள்ள பீர் லோடு ஏற்றி வந்த 11 லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு லாரியிலும் ஆயிரத்து 200 கேஸ் பீர்கள் உள்ளது. 8 நாட்களாக அனுமதி கிடைக்காததால் இவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை புதுவை கலால்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து கலால்துறை அதிகாரிகள் கூறும்போது, மதுபான லாரிகள் அத்தியாவசிய பட்டியலில் வரவில்லை. புதுவையில் குடோவுன்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனையும் தற்போது திறக்க முடியாது. இந்த லாரிகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என தெரிவித்தனர். லாரி உரிமையாளர் சங்க செயலர் குமார் கூறும்போது, ஊரடங்கிற்கு முன்பே இந்த லாரிகள் புறப்பட்டுவிட்டன.

புதுவை எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக தமிழக போலீசார் கையெழுத்து வாங்கிவிட்டனர். பெர்மிட் முடிந்ததால் மீண்டும் தமிழகத்திற்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. ஊரடங்கு சீராகும் வரை 11 லாரிகளை சங்க பாதுகாப்பில் வைக்க அனுமதி கேட்டுள்ளோம். புதுவை முதல்-அமைச்சர் அனுமதி தருவார் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

Similar News