செய்திகள்
கோப்பு படம்

சாராயம் விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த 8 பேர் கைது

Published On 2020-04-24 14:32 IST   |   Update On 2020-04-24 14:32:00 IST
வில்லியனூர் அருகே சாராயம் விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக புதுவையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மதுபான கடை மற்றும் சாராயக்கடை, கள் கடை அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வில்லியனூர் பகுதியில் சிலர் சாராயத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கள்ளச்சாராயம் விற்ற உத்திரவாகினிபேட் மற்றும் ஆரியபாளையம் பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன், சுரேஷ், மற்றோரு சுரேஷ், அருண்குமார், மணி, கணபதி, முருகன், மகேஷ்குமார் ஆகிய 8 பேர் மீது வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த 8 பேரையும் இன்று காலை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர்.

Similar News