செய்திகள்
தாக்குதல்

தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேரை தாக்கி கொலை மிரட்டல்- 2 பேருக்கு வலைவீச்சு

Published On 2020-04-23 16:26 IST   |   Update On 2020-04-23 16:26:00 IST
வீராம்பட்டினத்தில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பாகூர்:

வீராம்பட்டினம் நாகூர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (வயதுது28). தனியார் நிறுவன ஊழியர். தற்போது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக நிறுவனம் மூடப்பட்டதால் வீட்டிலேயே இருந்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள கடற்கரை பகுதிக்கு சென்றார். அப்போது இவரது உறவினரின் மகன் வரதன் (19) என்பவர் கடலில் வலையில் பிடித்த மீன்களை தனியாக எடுத்ததை வசந்த் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.

அந்த நேரத்தில் வரதன் குளிர்பான பாட்டிலை எடுத்து அதனை திறந்து கொடுக்கும்படி அதே பகுதியை சேர்ந்த விஜயனிடம் வற்புறுத்தினார். அதற்கு விஜயன் மற்றும் அவரது சகோதரர் விஸ்வா ஆகியோர் எங்களிடமே குளிர்பான பாட்டிலை திறந்து கொடுக்குமா? கேட்கிறாயா? என தகராறு செய்து அவர்கள் வரதனை தாக்கினர். இதனை வசந்த் தட்டிக்கேட்ட போது அவரையும் தடியால் தாக்கி 2 பேரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வசந்த் மற்றும் வரதன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயன் மற்றும் அவரது சகோதரர் விஸ்வாக ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Similar News