செய்திகள்
விண்ணப்பம்

ராமநாதபுரம்-சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த கிராம கோவில்கள் பூசாரிகள் கொரோனா நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2020-04-17 15:21 IST   |   Update On 2020-04-17 15:21:00 IST
ராமநாதபுரம்-சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த கிராம கோவில்கள் பூசாரிகள் கொரோனா நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
சிவகங்கை:

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் கிராமக்கோவில் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை ரூ.1,000 வழங்கப்படவுள்ளது. இந்த நிவாரணத் தொகை பூசாரிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதற்கு பரமக்குடி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் கிராமக்கோவில் பூசாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகள் உடனடியாக பெயர், கைப்பேசி தொலைபேசி எண், வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க விபரம், அடையாள அட்டை விவரம் ஆகியவற்றை சிவகங்கை, மானாமதுரை, காளையார்கோவில், திருப்புவனம் வட்டத்தில் உள்ளவர்கள் 94436 48434 என்ற வாட்ஸ் அப் மூலமாகவும், திருப்பத்தூர் வட்டத்தில் உள்ளவர்கள் 98426 37751 என்ற வாட்ஸ்அப் மூலமாகவும், சிங்கம்புணரி வட்டத்தில் உள்ளவர்கள் 96291 35822 என்ற வாட்ஸ் அப் மூலமாகவும், காரைக்குடி வட்டத்தில் உள்ளவர்கள் 9677757520 என்ற வாட்ஸ் அப் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.

அதே போன்று தேவகோட்டை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்தில் உள்ளவர்கள் 94454 40013 என்ற வாட்ஸ்அப் மூலமாகவும், பரமக் குடி, இளையான்குடி, கடலாடி, முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ளவர்கள் 90879 72180 என்ற வாட்ஸ் அப் மூலமாகவும், ராம நாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை வட்டத்தில் உள்ளவர்கள் 99425 65677 என்ற வாட்ஸ்அப் மூலமாகவும், கமுதி வட்டத்தில் உள்ளவர்கள் 9976903966 என்ற வாட்ஸ்அப் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.

இது தொடர்பாக உதவி ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வரத் தேவையில்லை என பரமக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

Similar News