செய்திகள்
தற்கொலை

புதுவையில் அழகு நிலைய பெண் ஊழியர் தற்கொலை

Published On 2020-04-14 21:54 IST   |   Update On 2020-04-14 21:54:00 IST
புதுவையில் திருமணத்துக்கு காதலன் தாமதம் செய்து வந்ததால் அழகு நிலைய பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை பொய்யாகுளம் வினோபாநகரை சேர்ந்தவர் உமாராணி (வயது29). இவர் புதுவை சட்டக்கல்லூரி அருகே உள்ள அழகு நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரும் முத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விவகாரம் இரு வீட்டார் பெற்றோருக்கு தெரியவந்ததும் திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தனர்.

இதற்கிடையே காதலன் வீட்டார் திருமணத்திற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நேற்று உமாராணி தனது காதலனிடம் கேட்டு உடனடி யாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்.

இதுதொடர்பாக அவர்களிடையே அப்போது பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த உமாராணி தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மின் விசிறி பைப்பில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது சகோதரர் உமாபதி கோரி மேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News