செய்திகள்
கலெக்டர் ஜெயகாந்தன்

கால்நடை தீவன கடைகள் திறக்கலாம்- கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவு

Published On 2020-04-09 14:00 GMT   |   Update On 2020-04-09 14:00 GMT
சிவகங்கை மாவட்டத்தில் கால்நடை தீவன கடைகள் திறக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனங்கள் பற்றாக்குறை இல்லாதவாறு அன்றாடம் தீவனம் கிடைக்கச் செய்திட ஏதுவாக மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தீவன விற்பனை கடைகளை மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள நேரங்களில் திறந்து வைத்து கால்நடை வளர்ப்போருக்கு விற்பனை செய்ய அனைத்து தீவன விற்பனை கடை வியாபாரிகளுக்கு இதன் மூலம்  தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கறவை மாடுகள் மற்றும் கோழிகளுக்கு தீவனங்கள் இத் தருணத்தில் தீவனப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அன்றாடம் விற்பனை செய்து வரும் மருந்துகள் மற்றும் பால் போன்ற கடைகளை போல் தீவனங்கள் விற்பனை கடைகளையும் திறந்து விற்பனை செய்து, பால் உற்பத்தி குறையாமல் கால்நடைகளுக்கு தீவனங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News