செய்திகள்
இடமாற்றம்

கள்ள சாராயத்தை தடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் மாற்றம்

Published On 2020-04-09 11:46 GMT   |   Update On 2020-04-09 11:46 GMT
புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கள்ள சாராயத்தை தடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சாராயம் மற்றும் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் புதுவை மற்றும் தமிழக பகுதியான விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தடையின்றி சாராய விற்பனை நடந்தது. இங்கு பிடிப்பட்ட நபர்கள் திருபுவனையில் வாங்கி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது

கலால் துறை ஆணையர் தயாளன் தலைமையிலான அதிகாரிகள் கடந்த வாரம் திருபுவனை, ஆண்டியார்பாளையம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிரபல சாராய வியாபாரி ராஜா வீட்டில் கள்ள சாராயத் தொழிற்சாலை இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கிருந்து சாராய கேன்கள், சாராய பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் திடீரென அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News