செய்திகள்
சீல் வைப்பு - கோப்புப்படம்

மதுக்கடைகளுக்கு சீல் வைப்பு - கலால்துறை நடவடிக்கை

Published On 2020-04-08 14:29 GMT   |   Update On 2020-04-08 14:29 GMT
ஊரடங்கு உத்தரவு காரணமாக அனுமதியின்றி இயங்கி வந்த மது கடை குடோன்களுக்கு சீல் வைக்கும் பணியை கலால்துறை தொடங்கியுள்ளது.
புதுச்சேரி:

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் மளிகை, காய்கறி, பழங்கள், மருந்தகம், பால் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் கடைகளை மட்டும் திறந்து விற்பனை செய்ய அரசு அனுமதியளித்துள்ளது.

இதிலும் தற்போது மளிகை, காய்கறி, பழம் உள்ளிட்ட கடைகளை மதியம் ஒரு மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுவையில் உள்ள மது, சாராய கடைகள் மூடப்பட்டு கிடக்கிறது. இருப்பினும் மதுபாட்டில்கள் கூடுதல் விலையில் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. ஒரு மதுபாட்டில் 2 மடங்கு வரை கூடுதலாக விலை வைத்து விற்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது.

வழக்கமாக தேர்தல் காலத்தில் மட்டுமே மதுக் கடைகளுக்கும், மது குடோன்களுக்கும் சீல் வைக்கப்படும். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் 2 வாரமாகியும் மது கடைக ளுக்கு சீல் வைக்கப்படாமல் இருந்தது. ஆனால் தொடர் புகார் காரணமாக மது கடைகள், குடோன்களுக்கு சீல் வைக்கும் பணியை கலால்துறை தொடங்கியுள்ளது. நகர பகுதிகளில் கடைகளை தேடிச்சென்று கலால்துறையினர் சீல் வைத்து வருகின்றனர்.
Tags:    

Similar News